• Breaking News

    ஜாக்டோ ஜியோவுக்கு தடை

     


    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 

    ஆனால் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.இந் நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.

    இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமாறு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஏப்.23ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து, அதுவரை போராட்டம் நடத்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    No comments