• Breaking News

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை...... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

     


    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1977-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக 1.5 கோடி நிவாரண நிதி பெற்றதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் கிழமை நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜவாஹிருல்லாவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஒரு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    No comments