ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அந்த உரிமை இல்லை.... உயர் நீதிமன்றம் தீர்ப்பு.....
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசியல் கட்சிகள் மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு மத்திய அரசுக்கு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இருக்கிறது எனவும் மாநில அரசுக்கு அந்த உரிமை இல்லை எனவும் கூறி வருகிறது.
ஆனால் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசுகளே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய நிலையில் திமுக அரசு மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன் என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகிறது.இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டால் மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. மத்திய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதால் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதோடு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக்கூறி அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்தது.
No comments