• Breaking News

    தூய்மை பணியாளர் குறித்து அவதூறு..... சவுக்கு சங்கரின் வீடு சூறை.....

     


    சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு உள்ளது. இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மை பணியாளரை சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாக சொல்லப்படுகிறது.அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது வீட்டை இன்று காலை 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாரகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை 9.30 மணி முதல் துப்புரவு தொழிலாளர்கள் என கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் என் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளன.நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்திற்கெல்லாம் இந்த கும்பல் எங்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை இடங்களிலும் அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடை நீரையும் மலத்தையும் கொட்டினர்.

    என்ன நடந்தது என என் தாயாருக்கு போன் செய்த போது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாடு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர்.9.30 மணி முதல் என் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் நகரவே இல்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை என அந்த பதிவில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

    No comments