நடிகை லைலாவுக்கு இப்படி ஒரு வியாதியா..... கட்டுப்படுத்தினால் கண்ணீர் வருமா..?

 


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு விக்ரம் மற்றும் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். தற்போது படங்களில் நடிகை லைலா குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை லைலா தற்போது தான் ஒரு அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதாவது சிரிக்கும் நோயினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதனால் ஒரு நிமிடம் கூட அவரால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது. ஒருவேளை அவர் சிரிப்பதை கட்டுப்படுத்தினால் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும். இதனால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுவார். மேலும் பிதாமகன் பட சூட்டிங் என்பது நடிகர் விக்ரம் ஒரு நிமிடம் சிரிப்பை கட்டுப்படுத்துமாறு நடிகை லைலாவிடம் சவால் விட்ட நிலையில் 30 வினாடிகள் கூட அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மேக்கப் முற்றிலும் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments