• Breaking News

    மானம் ரோஷம் இருக்கா.... கோபாலபுரத்தின் கொத்தடிமை ரகுபதி.... வெளுத்தெடுத்த ஜெயக்குமார்

     


    தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்தவர் என்று எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலின் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் தமிழக உரிமைகளை அடகு வைத்தது முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் இது தொடர்பாக நேரடியாக என்னுடன் விவாதிக்க தயாரா என்றும் சவால் வேண்டியிருந்தார்.

     இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவர் பேசியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் தமிழகத்தில் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகள் பற்றி விவாதிக்க தயாரா என்று கேட்டுள்ளார்.

    தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார் இது தொடர்பான நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா.?முதல்வர் ஸ்டாலின் நேரடியாக எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் அளித்திருந்தால் நாங்கள் பாராட்டி இருப்போம்.தமிழகத்தின் உரிமையை நீட் மற்றும் காவிரி விவகாரம் என பல விஷயங்களில் திமுக அரசு விட்டுக் கொடுத்துள்ளது. அமைச்சர் ரகுபதி திமுகவில் முறைவாசல் செய்து வருகிறார்.

     முறைவாசல் செய்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தற்போது சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அவருக்கு மானம் ரோஷம் எல்லாம் இருக்கிறதா. கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் எங்களால் பேச முடியாது.மேலும் முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார் ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது என்றார்.

    No comments