முத்திய ரீல்ஸ் மோகம்..... வேலையை இழந்த சப் இன்ஸ்பெக்டர்
பீகார் மாநிலத்தில் பணியில் இருக்கும் போது பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக பிரியங்கா குப்தா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பஹார்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தார்.
இவர் பணி நேரத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இது மிகவும் வைரலானதால் அவருக்கு ரீல்ஸ் மோகம் முத்திவிட்டது. இதனால் அடிக்கடி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். அவர் பெரும்பாலும் பாலிவுட் பாடல்களை வீடியோ எடுக்க பயன்படுத்தினார். இது மாவட்ட எஸ்பியின் கவனத்திற்கு சென்ற நிலையில் பிரியங்காவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments