காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி..... தடுத்த காவலர்களை ஆபாசமாக திட்டி,மிரட்டியவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவைபுதூர் பகுதியில் தங்கியிருந்து பிளம்மிங் வேலை பார்த்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி மேகலா. இந்த நிலையில் கார்த்திகேயன் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று மேகலா மீது புகார் அளித்துள்ளார். அவரை அங்கேயே அமர சொன்ன காவலர்கள் மேகலாவை அழைத்து விசாரிப்பதாக தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் காவல் நிலையம் நுழைவு வாயிலுக்கு சென்று இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை காலியான வாட்டர் கேனில் பிடித்தார்.
அதன்பிறகு அந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் கார்த்திகேயனை தடுத்து நிறுத்தினர். அப்போது கார்த்திகேயன் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பிறகு எப்படியோ கார்த்திகேயனை மடக்கி பிடித்து தடுத்தனர். இதனையடுத்து காவலர்களை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக கார்த்திகேயன் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments