குத்தாலம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புனித லைலத்துல் கத்ரு இரவு சிறப்புத் தொழுகையுடன் கொண்டாடப்பட்டது..... திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் 30 நாட்கள் நோன்பிருந்து பின்னர் ரமலான் பண்டிகை கொண்டாடி இறைவனை வழிபடுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு கடந்த இரண்டாம் தேதி தமிழக முழுவதும் இஸ்லாமியர்கள் முதல் நோன்பு தொடங்கி தினம்தோறும் இரவு தராவீஹ் என்ற சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 27 ஆம் நோன்பிருந்து இரவு புனித லைலத்துல் கத்ரு இரவு சிறப்புத் தராவீஹ் தொழுகையுடன் நடைபெற்றது பின்னர் பள்ளிவாசல் இஸ்லாம் மார்க்கம் பற்றி இமாம் அபுதாகிர் சிறப்பு சொற்பொழிவு செய்தார் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments