• Breaking News

    கோவை: தனியார் பள்ளியை மூட எதிர்ப்பு.... பெற்றோருடன் மாணவ, மாணவிகள் சாலை மறியல்

     


    கோவை அவிநாசி சாலையில் வ.உ.சி மைதானம் எதிரே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவரும் இப்பள்ளியில்,கரோனா தொற்று காலத்திற்கு முன்பாக 700 மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது 173 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். 

    போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் நடப்பு கல்வியாண்டுடன் பள்ளி மூடப்படுவதாகவும், மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து கொள்ளும்படியும் நிர்வாகம் அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகை யிட்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று ஹுசூர் சாலை, அவிநாசி சாலை சந்திப்பில் மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     அவர்கள் கூறும்போது, “பள்ளியை திடீரென மூடினால் என்ன செய்வது? பள்ளியை தொடர்ந்து நடத்தும் வரை போராட்டம் நடத்துவோம்” என்றனர்.போலீஸார் சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளியை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

    No comments