• Breaking News

    பெரியாரின் சில்மிஷம் பற்றிய பேச்சு..... சீமானின் மனு தள்ளுபடி

     


    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற போது பெரியார் ஆதரவாளர்கள் வைத்திருப்பது வெங்காயம் எனவும் நாங்கள் வைத்திருப்பது வெடிகுண்டு எனவும் நீங்கள் வெங்காயத்தை வீசினால் நாங்கள் வெடிகுண்டை வீசுவோம் என்றும் வன்முறையை தூண்டும் விதமாக சீமான் பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அதன் பிறகு பெரியார் பாலியல் இச்சை வரும் போதெல்லாம் தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் சீமான் கூறினார்.இது தொடர்பாக சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்ந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

     இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சீமானின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் முன்னதாக நடிகர் விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கும் அவர் மீது நடைபெற்று வரும் நிலையில் தற்போது பெரியார் வழக்கிலும் சீமானுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

    No comments