தமிழ்நாடு மாநில திட்டக்குழுவினால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரமாக அறிவிக்கப்பட்ட கீழையூர் மற்றும் கீழ்வேளூர் வட்டாரத்தினை மேம்படுத்த வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில் கீழையூர் மற்றும் கீழ்வேளூர் வட்டாரத்திற்கு தலா 4 கோடி மதீப்பீட்டில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி தமிழ்நாடு மாநில திட்டக் குழு, நாகை மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மற்றும் கீழ்வேளூர் வட்டாரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மதிப்புக்கூட்டு பயிற்சி போன்ற 7 விதமான பயிற்சி திட்டத்தை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக கீழையூர் வட்டார மக்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி ஈசனூரில் 3 நாள் நடைபெற்றது. தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் என்.சசிப்பிரியா பயிற்சியை துவக்கி வைத்து பயிற்சி கருவி பெட்டி வழங்கினார்.மூன்று நாள் பயற்சி முடிவில் பயிற்சியில் பங்கு பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் பயனபடியாக ரூ. 300, ஊக்க பரிசாக மடிக்கணினி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா ரிப்போட்டர் த.கண்ணன்
0 Comments