திண்டுக்கல்: மூதாட்டியின் தங்கச் சங்கலியை திருடிவிட்டு மன்னிப்பு கடிதம் வைத்துவிட்டு சென்ற திருடன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டி ஒருவர் வசித்து வருக்கிறார். இந்நிலையில் திடீரென வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது அந்த திருடன் தான் செய்தது தவறு என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திருடன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து ஊரில் பதுங்கி இருந்த சக்திவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
No comments