தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ‘₹’-க்கு பதிலாக ‘ரூ’.... தமிழக அரசு சொன்ன விளக்கம்
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டசபையில் நாளை நடைபெற உள்ளது. இதனை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தற்போதைய ஆளும் கட்சி திமுகவின் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதன்முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்நிலையில் தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீட்டை மாற்றி, தமிழில் உள்ள ரூ எழுத்துடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய இலட்சினை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் கூறியதாவது, எல்லோருக்கும் எல்லாம் என்கிற வாசகத்துடன் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்ய என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலட்சினையை பதிவிட்டு இருந்தார்.
மத்திய அரசின் முன்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது பட்ஜெட் இலட்சினையில் மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் உபயோகித்து உள்ளார் என்றும், இது தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது என்றும், இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
No comments