கோவிலம்பாக்கம் ஊராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆலோசனைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ . ரங்கநாதன் முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி வார்டு உறுப்பினர் ஆர். சொக்கலிங்கம் ஏற்பட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளராக சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு வழங்கினார் .இதில் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments