ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் ரிஷப் பண்டின் மீது தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், டி20 பாணியை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்த்த இவர் தற்போது குறைந்த ஸ்டிரைக் ரேட்டுடன் கடுமையான போராட்டம் நடத்தி வருகிறார். இவரை லக்னோ அணி 27 கோடி கொடுத்து எடுத்தது. தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக ஆறு பந்தில் டக் அவுட் அடித்த ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இரண்டு ஆட்டங்களிலும் அவர் எந்தவிதமான பவுண்ட்டிரியுமே அடிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பிரபல இந்திய யூட்யூப் விளையாட்டு சேனலின் தொகுப்பாளர் நேரலை நிகழ்ச்சியின் போது தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டூடியோவில் இருந்த டிவி ஸ்கிரீனை உடைத்து உள்ளார். மேலும் இவர் மேல் இனி நம்பிக்கை வைக்க முடியாது. இப்படியொரு கேப்டனா? என்று அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
0 Comments