திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,புதுவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு ஆணைக்கிணங்க ஆண்டு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக அற்புத ராணி சதீஷ்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் , வட்டார கல்வி அலுவலர் முனிராஜ சேகர் வட்டார மேற்பார்வையாளர் ஏழுமலை புதுவாயல் ஊர் பொதுமக்களும், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் பரிசளிக்கப்பட்டது, .மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. மாணவர்கள் அனைவருக்கும் டிபன் பாக்ஸ்,சில்வர் வாட்டர் பாட்டில்,நோட்டுப் புத்தகங்கள், ஸ்வீட் காரம், சாக்லேட் வாட்டர் பாட்டல்ஸ் கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் மதிய உணவாக பிரியாணி ஊர் பொதுமக்கள் சார்பாக வழங்கப்பட்டன.
ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர் N கலைவாணி அவர்களை பாராட்டி சிறப்பிக்கப்பட்டது, ஊர் பொதுமக்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் இளைஞர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
0 Comments