• Breaking News

    இனி ஸ்டாலின் அப்பா இல்லை கேப்டன்.... தலையில் அடித்துக்கொண்டு விமர்சித்த சவுக்கு சங்கர்

     


    தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் தன்னை அப்பா என்று கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பட கூறி வருகிறார். ஆனால் எதிர்கட்சிகள் அப்பா என்று கூறுவதை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக அதிமுகவினர் தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அப்பா என்று அவர்கள் கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா என்று கேட்கிறார்கள். இதேபோன்று பாஜகவினரும் விமர்சிக்கிறார்கள்.

    இந்த நிலையில் சவுக்கு சங்கர் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து ஒரு எக்ஸ் தள  பதிவை போட்டுள்ளார். அதில் இனி ஸ்டாலின் அப்பா இல்லை கேப்டனாம் என்று தலையில் அடித்தபடி ஒரு ஹேஷ்டேக்கை போட்டுள்ளார். அதாவது சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த அனைத்து கட்சி கூட்டத்தை முன்னிட்டு திமுகவினர் கேப்டன் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக பதிவிட்டு இருந்தனர். மேலும் இதனை விமர்சித்து தான் சவுக்கு சங்கர் ஸ்டாலின் இனி அப்பா இல்லை கேப்டன் என்று பதிவிட்டுள்ளார்.



    No comments