• Breaking News

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மேடவாக்கம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

     


    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி, சென்னை புறநகர் மாவட்டம், பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், மேடவாக்கம் ஊராட்சி வடக்குப்பட்டில் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் கழக கொடியினை ஏற்றி வைத்து ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அறுசுவை உணவு வழங்கினார். 

    கழக அம்மா பேரவை துணைச் செயலாளரும் பரங்கிமலை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர் முன்னிலையில் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜி.ஆனந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் எம்.ஜி.சக்திவேல், கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் எஸ்.பாபு, மாவட்டக் கழக துணைச் செயலாளர் எம்.பி.கண்ணபிரான், ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர்  எம்.திருநீலகண்டன், மற்றும் நிர்வாகிகள் எஸ்.பாலு, சதீஷ்குமார், எஸ்.வேல்முருகன், பி.ஹரிகிருஷ்ணன், விக்கி, விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    No comments