• Breaking News

    தூத்துக்குடி: ஜாதி அடையாளங்களை மாணவர்கள் மூலம் அழித்த கலெக்டர்


     தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு தேவேந்திர ராஜ் என்ற மாணவன் அரசு பேருந்தில் தேர்வுக்காக பள்ளிக்கு  செல்லும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் மரித்து அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவன் தேர்வு எழுதக்கூடாது என்பதற்காக கை விரல்களை வெட்டியுள்ளனர்.

     அதாவது கபடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஜாதி வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவன் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சென்றனர். அவர்கள் அங்குள்ள ஜாதி அடையாளங்களை மாணவர்களை வைத்து அவர்களின் கைகளால் பெயிண்ட் அடித்து அழிக்க வைத்தனர். ஜாதி பாகுபாட்டிற்கு எதிரான ஒரு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனை கூறினர்.

     மேலும் 11ஆம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதன் எதிரொலியாக ஜாதி அடையாளங்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மாணவர்கள் மூலமே அழிக்க வைத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.

    No comments