• Breaking News

    தினசரி சினிமா வசனம் போல் வெட்டி பேச்சு பேசும் முதலமைச்சர்..... லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி

     


    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்த போது முத்துக்குமார் என்ற போலீஸ்காரருக்கும் சிலருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இதனால் முத்துக்குமார் டாஸ்மாக் கடையை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்ற நிலையில் அவரை பின்தொடர்ந்து வந்த சிலர் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல். மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே!

    தங்கள் பணிகளை செய்யும் காவல்துறையினரின் பாதுகாப்பு பறிபோவதற்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும்!

    திரு. ஸ்டாலின் அவர்களே- இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள். காவலர் முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    No comments