தோரணமலை முருகன் கோவிலில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம்
தோரணமலை முருகன் கோவிலில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் 30ந்தேதி நடைபெறுகிறது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படி கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி-கடையம் சாலையில்அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவிலில் ஆன்மீக பணியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகள், கல்வி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோரணமலை முருகன் கோவில் வளாகத்தில் கோவிலுக்கு வருகை தரும்கிராமப்புற மாணவ, மாணவிகள் அறிவு வளர்ச்சி பெறவும், பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறவும் வேண்டியும் கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
தற்போது கோடை விடுமுறை நாட்களில் பல்வேறு போட்டி போட்டித்தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள், கருத்தரங்கம் போன்றவை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் நிர்வாகமும், சென்னை துளிர் ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1,2,4 தேர்வுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் வருகிற 30ந்தேதி (ஞாயிறு) காலை 9;.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படி தோரணமலை ஸ்ரீமுருகனுக்கு 60 ஆண்டுகள் கடந்து இறை பணி செய்து வரும் பரம்பரை அறங்காவலர் செண்கபராமன் ஆதிநாராயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments