கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் கேப் , இலவச நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை கோபி டிஎஸ்பி ஜி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையத்தில் காவலர்களுக்கு கோடை காலம் ஆரம்பித்து வெப்ப தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வெயிலிலும் சமாளிக்க போக்குவரத்தை சீர் செய்யும் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறை, போக்குவரத்து காவலர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் , ஆணை பிறப்பித்ததின் பெயரில் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி. சீனிவாசன் கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் முருகன் ஏற்பாட்டில் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு காகித கூழ் தொப்பி (solar cap) வழங்கியும், இலவச நீர் மோர், காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் வழங்க மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார் முன்வந்து நீர் மோர் இலவசமாக வழங்கியுள்ளார்.
மேலும் இலவச நீர் மோர் மற்றும் காகிதகூல் தொப்பி, (solar cap) தலைக்கவசம் வழங்கினார்.போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபானி மற்றும் சிஐடி தங்கராஜ் , காவலர்கள் உடன் இருந்தார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments