நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக்கொலை
திருநெல்வேலி டவுன் தடி வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 60. இவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,. இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் மற்றொருவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் தடிவீரன் கோவில் தெருவில் உள்ள மசூதி ஒன்றில் இன்று (மார்ச் 18) காலை தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசேனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தலை கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே ஜாகிர் உசேன் பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த திருநெல்வேலி மேற்கு மாவட்ட துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் அஜித்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்பட உயர் அதிகாரிகள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முன் விரோதமாக கொலை நடந்துள்ளது என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
No comments