• Breaking News

    கும்மிடிப்பூண்டி: மும்மொழி கல்வியை ஆதரித்து பாஜகவினர் கையெழுத்து இயக்கம்


    கும்மிடிப்பூண்டியில் மும்மொழி கொள்கையை ஆதரித்து சமக்கல்வி எங்கள் உரிமை என்று கூறி பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் ஜெ.சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்திற்கு  பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன், பாஜக இளைஞர் அணி  மாவட்ட தலைவர் நரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சமூக ஊடக பிரிவு மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றியதோடு, கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்களிடம் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து  பெற்றார்.

    தொடர்ந்து பாஜகவினர் கும்மிடிப்பூண்டி பஜாரில் தீவிரமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இந்த நிகழ்வின் முடிவில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய தலைவர் ஜெ.சந்திரசேகர் நன்றி கூறினார்.

    No comments