• Breaking News

    துபாயில் நகைக்கடை வைத்திருக்கும் நடிகை ரன்யா ராவ்..... விசாரணையில் வெளிவரும் பரபரப்பு தகவல்கள்

     


    கன்னடத் திரைப்படமான மானிக்யா மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரன்யா ராவ்(33). இவர் துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக மார்ச் 3ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவரது நண்பரான நடிகர் தருண் ராஜுடன் (31) சேர்ந்து இந்த கடத்தல் குற்றத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவை கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி உள்ளது. மேலும் அவரது பெயரை காத்திருப்போர் பட்டியலிலும் வைத்துள்ளது.

    இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து சிபிஐ அமலாக்க துறை அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அடுத்தடுத்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ரன்யா ராவ் அவரது நண்பரான தருண் ராஜூ இணைந்து துபாயிலிருந்து தங்கம் கடத்துவதற்காக அங்கு ஒரு நகைக்கடையை நடத்தி வந்துள்ளனர். இந்த நகைக் கடையில் 50 % பணத்தை முதலீடு செய்து கடையை நடத்தி வந்துள்ளனர். துபாயில் தங்கம் வாங்குவதற்காக வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி அங்குள்ள வியாபாரிகளிடம் ரன்யா ராவ் தங்கங்களை பெற்றுள்ளார்.

    இவ்வாறு ஒரு முறை ஒரு வியாபாரி ரன்யா ராவிடம் இருந்து ரூபாய் 1.70 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு தங்கத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இந்த மோசடி குறித்து நடிகர் தருண்ராஜ் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் நடத்திய விசாரணையில் இருவரும் துபாய் மட்டுமல்லாமல் ஜெனிவா, பேங்க்காக்  சேர்ந்த நகை வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக தான் இருவரும் இணைந்து துபாயில் நகைக்கடையை நடத்தி வந்துள்ளனர்.

    துபாயில் இருந்து ஒவ்வொரு முறையும் தான் தங்கத்தை கடத்தி வரும் போதும் தான் நடத்தி வரும் நிறுவனம் குறித்தும் சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக தொடர்ந்து துபாய் அதிகாரிகளை நடிகை ரம்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து இவர்களது வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தியதில் இருவரும் வங்கி கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய்களை உடனடியாக மாற்றம் செய்தது காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவர் மட்டுமல்லாமல் இந்த கடத்தல் பின்னணியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு இருக்கலாம் என சிபிஐ வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகை ரன்யா ராவ் பெங்களூரு, கோவா மற்றும் மும்பையில் இருந்து சுமார் 52 முறைக்கு மேல் துபாய்க்கு சென்று வந்துள்ளார். இதில் பல சமயங்களில் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து இந்தியாவிற்கும் திரும்பி வந்துள்ளார். இதனை வைத்து தங்க கடத்தலில் நடிகை தொடர்ந்து ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறையை பாதுகாப்பில்  வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் தங்கம் கடத்துதல் விவகாரத்தில் தொடர்புடைய 50க்கும்  மேற்பட்ட நபர்களை வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments