• Breaking News

    மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டுள்ளது..... ஆளுநர் ஆர்.என் ரவி குற்றச்சாட்டு

     



    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ராமேஸ்வரத்திற்கு சென்று மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை சந்தித்துள்ளார். இதுபற்றி ஆளுநர் கூறியதாவது, ராமேஸ்வரத்திற்கு இன்று நான் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளை சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன்.

    கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என கூறியுள்ளார்.

    No comments