• Breaking News

    தாம்பரம் மாநகர திமுக சார்பில் மேயர் வசந்தகுமாரி தலைமையில் மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது


    தாம்பரம் மாநகர திமுக மகளிர் அணி சார்பில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் மாநகர கழக துணைச் செயலாளர் மேயர் க.வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையிலும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ரமணி ஆதிமூலம் வரவேற்பில் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். உடன் துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழுத்தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், பகுதி கழக செயலாளர்கள் இரா.சுரேஷ், ஆ.நடராஜன் மற்றும் 70வார்டு மகளிர்களும், கழக நிர்வாகிகள்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் பகுதி துணை செயலாளர் லிங்கேஸ்வரி பாபு நன்றி உரையாற்றினார்.

    No comments