சத்தியமங்கலம்: மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி எம்பி ஆ.ராசா மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் கடம்பூர் மலைப் பகுதியிலும் அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப் பகுதியில் வாழும் மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜீவல் ஒரம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.உடன் தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனர் ச.அண்ணாதுரை மற்றும் மலைவாழ் ( எஸ் டி) மலையாளி மக்கள் நலச் சங்கப் பொறுப்பாளர்கள் சின்ராஜ் , முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
No comments