கும்மிடிப்பூண்டி: அரசு துவக்கப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்யொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்களை வழங்கினார் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபுலியூர் ஊராட்சியில் கீமள்ளூர் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளியில் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி துணை அமைப்பாளர் முத்து ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எவர் சிலவர் தட்டு வழங்கினார் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ .கோவிந்தராஜன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரமேஷ்,ஒன்றிய செயலாளர் மணிபாலன், சுற்றுச்சூழல் அணி பாஸ்கர், சந்திரமோகன் மற்றும் முத்துசாமி,மஸ்தான், அமரம் பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுஜனா சுதாகர், பழனி, நாகராஜ் ,சார்லஸ் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments