நாகை அருகே வலிவலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்..... போலீசார் தீவிர விசாரணை


நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் வெள்ளாற்று பாலத்திற்கு அருகில் சுமார் 15அடி ஆழமுள்ள மதகடி வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக  தகவல் கிடைத்தது.இதையடுத்த சம்பவம் இடத்திற்கு விரைந்த வலிவலம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் வலிவலம் பண்டார வடை தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் (35) என்பது தெரிய வந்தது.

மேலும் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட உறவினர்கள், இவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.உயிரிழந்த இளைஞர் திருமணமாகாதவர் என்பதும் குடி போதைக்கு அடிமையாளர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவரது  பின்தலையில் ரத்தகாயம்  கண் புருவத்தில் மீன் கடித்த சிறிய காயங்கள் உள்ள நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் அமரர் உறுதி மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.வாய்க்கால்  மதகு கட்டையில்  சுமார் 15 அடி ஆழத்தில் தவறி விழுந்தரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments