• Breaking News

    மனைவியுடன் தொடர்பு..... நெருங்கிய நண்பனை கொலை செய்து மூட்டை கட்டிய கணவன்


     சென்னை கொருக்குப்பேட்டை பிபிசியில் சுற்றுச்சூழல் அருகே ரத்தக்கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. சிறு வயதிலிருந்து சதீஷ்குமாரும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரத்குமார் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர் சரத்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

    அப்போது சரத்குமாரின் மனைவிக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சரத்குமார் தனது நண்பரையும், மனைவியையும் கண்டித்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி சதீஷ்குமார் சரத்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சரத்குமாருக்கும் சதீஷ்குமார் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த சரத்குமார் வீட்டிலிருந்து ஸ்குரு டிரைவர் மற்றும் கத்தியால் சதீஷ்குமாரை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கு முட்டையில் கட்டி வீசியது தெரியவந்தது. இதனால் சரத்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    No comments