வட மாநிலத்தவர்கள் பன்னிக்குட்டி போல பெத்து போடுறாங்க..... அமைச்சர் த.மோ.அன்பரசன் மீண்டும் சர்ச்சை பேச்சு
திமுக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் த.மோ. அன்பரசன் வட மாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது வட மாநில மக்கள் பன்னிக்குட்டிகள் போல் பிள்ளைகளை பெற்று போடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பன்னிக்குட்டி போல் பிள்ளைகளைப் பெற்று மக்கள் தொகையை பெருக்கிக் கொண்ட நிலையில் தற்போது நம்முடைய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவிட்டது என கூறி தொகுதிகளை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதால் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் குடும்ப கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தினார்கள்.
அதன்படி முதலில் நாம் இருவர் நமக்கு இருவர் என்று கூறினோம். அதற்கு அடுத்தபடியாக நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றோம். இறுதியில் நமக்கு நாமே குழந்தைகள் நமக்கு எதுக்கு பிள்ளைகள் என்பதை கொண்டு வந்தோம். மத்திய அரசு கூறியதால் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
ஆனால் தற்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய பிறகு தொகுதியை குறைப்போம் என்கிறார்கள்.தென் மாநிலங்களில் இவர்களுடைய பருப்பு வேகாததால் தான் தற்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்கிறார்கள் என்றார். மேலும் இதற்கு முன்பு ஹிந்தி படித்தவன் என்னுடைய வீட்டில் மாடு தான் மேய்க்கிறான் ஹிந்தி படித்தால் மாடு மேய்க்கும் வேலைக்கு தான் போக முடியும் என்று அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments