மதுரை: வாடிப்பட்டி வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி நான்கு நாள் 23.02.2025 முதல் 26.02.25 வரை வட்டார அலுவலகத்தில் நடைப்பெற்றது. இன்று 28.02.25 திருவாலை வாயநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் மக்கள் தொலை பார்வை பயிற்சி நடைப் பெற்றது. இதில் வட்டார அளவிலான கூட்டமைப்பு தலைவர் கங்கா தேவி தலைமையில் வட்டார செயலாளர் நந்தனாதேவி முன்னிலையில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயலாளர் பஞ்சு வரவேற்று பேசினார்.
மாநில வள பயிற்றுநர்கள் வீரமணி,உமா மகேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி தொடங்கப்பட்டது. இதில் செயல்முறை விளக்கம், சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது.
கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , போன்ற பரிமாணங்கள் கொண்டு 2025 - 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு கொண்டு இந்த ஆண்டு உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் 15 மாவட்டத்திலிருந்து மாவட்ட வள பயிற்றுநர்கள் ஸ்ரீரங்கபாணி, சுரேஷ் குமார், பிரபு, குணா, சித்ரா, விமலா.பொன்னி .இளமதி, பிந்தியா, அம்சவேணி, கீதா, ரோஜா, தங்கலெட்சுமி, தங்கம்மாள்,ஹேமாவதி மற்றும் ஹெலான் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டனார். முடிவில் கணக்காளர் அமுதாதேவி நன்றி கூறினர்.
No comments