ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.82 லட்சம் உண்டியல் காணிக்கை
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் மற்றும் அதன் வளாக பகுதியில் 20 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் கோவில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
கோவில் செயல் அலுவலர் மேனகா, ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், ஆய்வாளர் சங்கர கோமதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.82 லட்சத்து 20 ஆயிரத்து 260 ஐ பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 388 கிராம் தங்கம், 527 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா, பூங்கொடி, கண்காணிப்பாளர் சங்கர், வெற்றி நர்சிங் கல்லூரி மாணவிகள், கோவில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments