பள்ளிக் கட்டணம் ரூ.800 செலுத்தவில்லை.... தேர்வு எழுத அனுமதி மறுத்ததால் 17 வயது சிறுமி தற்கொலை.....

 


உத்தரபிரதேசத்தில் ரூ.800 பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவி, தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ரியா பிரஜாபதி (17 வயது) என்ற சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி கட்டணம் ரூ.800 செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு எழுதுவதற்காக மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார், பள்ளி முதல்வர் ராஜ்குமார், ஆசிரியர் தீபக் சரோஜ் உள்ளிட்டோர் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்காமல் அனைவரின் முன்பும் அவமானப்படுத்தி வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதில் மனமுடைந்த ரியா வீட்டுக்கு சென்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மாணவியின் தாய் பூனம் தேவி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments