தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்டரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்தி செல்லப்பட்ட போது நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக மாலத்தீவு புறப்பட்டுச் சென்ற ஒரு கப்பலில் போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக, மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப் பொருள் 30 கிலோ சிக்கி உள்ளதாகவும், இதில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments