ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணியை கிண்டல் செய்த நபரை சக நண்பர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த ஜீவரத்தினம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி திருவள்ளுவர் நகரில் நண்பர்கள் சிலர் மது அருந்திவிட்டு, சிஎஸ்கே - ஆர்சிபி கிரிக்கெட் மேட்ச் பார்த்துள்ளனர். இதில் 17 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அப்போது சென்னை அணிக்கு ஆதரவாக பேசிய நண்பர்களை வேளச்சேரியை சேர்ந்த ஜீவரத்தினம்(27) கிண்டல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சென்னை அணியின் ஆதரவாளர்களான நண்பர்கள், கற்கள், கட்டைகளால் ஜீவரத்தினத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜீவ ரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த நபர்கள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்து சூறையாடி விட்டு சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லுக்குட்டை அப்பு, ஜெகதீஷ், ரமேஷ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments