மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேர்..... காவல்துறையில் புகார் கொடுக்காமல் மறைத்த கல்லூரி நிர்வாகம்..... வெடித்த கலவரம்

 


சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், அந்தக் கல்லூரியை மட்டுமல்லாமல் மொத்த மாணவர் சமுதாயத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலாமாண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழகிய இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியே அழைத்து சென்றுள்ளார். மறுநாள் அந்த மாணவி கல்லூரிக்கு வந்தபோது, அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டது.

அதனை பார்த்து  சக மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் மாணவியிடம் விவரத்தை கேட்டனர். அப்போது தனக்கு போதைப்பொருள் கொடுத்து 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்குப் பின்னர் காயங்களுடன் மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்காமல், சம்பவத்தை மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் விமர்சனத்தை எழுப்பின.

இந்த நிலையில், இந்திய மாணவர் கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரி, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது, இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிலர் காவல்துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டக்காரர்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், அவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments