கோவை அருகே ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்சில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சில் சோதனை நடத்தினர்.
அப்போது, ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணத்தை கேரள போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீஸ் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments