• Breaking News

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

     


    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில். ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அவற்றின் அறிக்கை இதோ:

    நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில், வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை, அதிகமாக பதிவாகி உள்ளது.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அநேக இடங்கள், வட மாவட்டங்களில், ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 3 வரை, தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில், மார்ச், 3, 4 தேதிகளில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 2 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments