உலக பணக்கார பெண்கள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்தார் ரோஷினி நாடார்

 


உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த முகேஷ் அம்பானி தற்போது அந்த பட்டியலில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஹரன் உலக பணக்காரர்கள் பட்டியல் 2025 (Hurun Global Rich List 2025) வெளியாகியிருக்கிறது.

இதன்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 15 பில்லியன் டாலர்கள் குறைந்து உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி இருக்கிறார். அதாவது அவருடைய சொத்து மதிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முகேஷ் அம்பானியை பொருத்தவரை முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அவர் வெளியேறி விட்டாலும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார். 

முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அதன் எரிசக்தி மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளில் சரியாக செயல்படவில்லை. மேலும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கணிசமான அளவு சரிவை கண்டது.

அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 13 சதவீதம் குறைந்து இருப்பதாக இந்த ஹரன் உலக பணக்காரர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. தற்போதைக்கு இவரின் சொத்து மதிப்பு 8.6 லட்சம் கோடியாக இருக்கிறது.உலக பணக்காரர்கள் பட்டியலில் வழக்கம் போல டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தான் முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் 129 பில்லியன் டாலர்கள் உயர்ந்து மொத்தம் 420 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

 டெஸ்லா நிறுவன மதிப்பு சரிவடைந்தாலும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர உதவியுள்ளது.உலக பணக்காரர்கள் பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடாரின் மகளான ரோஷினி நாடார் 3.5 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்போடு உலக பணக்கார பெண்கள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். 

உலகின் முதல் 10 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும் . அண்மையில் தான் ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக இருந்த 47 சதவீத பங்குகளை தன்னுடைய மகளான ரோஷினி நாடாரின் பெயரில் மாற்றினார்.

Post a Comment

0 Comments