• Breaking News

    தமிழக வெற்றி கழக பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைப்பு

     


    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், வரும் 28ம் தேதி (28.03.2025) அன்று நடைபெற உள்ளதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி கீழ்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குடு, உபசரிப்பு குழு ஆகிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குழுக்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments