செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதி ஆர்.எம்.கே நகரில் திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் முன்னிட்டு பெருங்களத்தூர் தெற்கு பகுதி 57வது வார்டு சார்பில் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சி பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் 56வது மாமன்ற உறுப்பினருமான எஸ்.சேகர் தலைமையில் ஆறுமுகம், காளிங்கன் ரகுநந்தன், சங்கர் ஏற்பாட்டில் 57வது வட்ட கழக செயலாளர் எஸ்.ஐசக் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, 4வது மண்டல குழு தலைவரும் பகுதி கழகச் செயலாளருமான டி.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கினார்கள்.உடன் மாநகரப் பிரதிநிதி ஜெபதுரை, 58வது மாமன்ற உறுப்பினர் மதுமிதா மதன்மதன், பரஞ்சோதி மற்றும் பெருங்களத்தூர் தெற்கு பகுதி நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பெனியல் ஸ்போர்ட்ஸ் அகடாமிக் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments