• Breaking News

    55 வயது எல்ஐசி முகவருக்கு திருமண ஆசை பாலிசி போட்ட 4 பெண்கள் கைது

     


    கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் பகுதியில் எல்.ஐ.சி முகவர் வசித்து வருகிறார். 55 வயதான அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எல்ஐசி முகவரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாத தனது தாயை கவனித்து கொள்வதற்காக எல்ஐசி முகவர் இரண்டாவது திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதற்காக திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதனை பார்த்து மதுரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் எல்ஐசி முகவரி தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.  மேலும் குடும்பத்துடன் நேரில் பார்க்க வர விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி முருகேஸ்வரி அவரது தங்கை கார்த்திகாயினி(28), முத்துலட்சுமி(45), போதும் பொண்ணு(43) ஆகியோர் எல்ஐசி முகவரி வீட்டிற்கு சென்றனர். அப்போது எல்ஐசி முகவர் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் அந்த பெண்ணுக்கு கொடுக்க இருக்கும் தங்க வளையல்கள், மோதிரம் என 8 பவுன் நகைகளை காண்பித்தார்.அதன் பிறகு அங்கிருந்த மேஜை டிராயரில் நகைகளை வைத்து விட்டு அவர்களை உபசரித்தார். 

    அன்றைய இரவு நான்கு பெண்களும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். மறுநாள் காலை எல்ஐசி முகவர் மேஜையை திறந்து பார்த்தார். அப்போது நகைகள் இல்லை. இதனால் மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் திருடி இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.மற்றொரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது உங்களை அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறியுள்ளனர்.

     மாயமான நகைகள் குறித்து கேட்டபோது சரியாக பதில் கொடுக்கவில்லை. இதுகுறித்து எல்ஐசி முகவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டிற்கு வந்த நான்கு பெண்கள்தான் நகையை திருடியது தெரியவந்தது. இதனால் முருகேஸ்வரி, கார்த்திகாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    No comments