ரூ.500 கோடி வருமான வரி மோசடி..... தமிழகத்தில் 22,500 பேர் போலி ஐடி ரிட்டன் தாக்கல்.....
தமிழ்நாட்டில் வருமான வரி செலுத்துவதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் புதிய வருமான வரி சட்டப்படி ஆண்டுகளுக்கு 7.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவோர் வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை. அதன் பிறகு பழைய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவோர் வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை.
இந்த முறை தற்போது மாறிவிட்ட நிலையில், பழைய வருமான வரி முறைப்படி 10 லட்ச ரூபாய் வரையில் வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் பல்வேறு லோன், காப்பீடு மற்றும் சேமிப்பு கணக்கு போன்றவற்றை காட்ட வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் வருமான வரி செலுத்துவதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தற்போது வருமான வரித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வருமான வரி கணக்கில் மோசடி செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அதோடு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் 500 கோடி ரூபாய் வரையில் வரி மோசடி செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 22,500 பேர் போலி ஐடி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வரி ஏய்ப்பு மற்றும் வரி திரும்பப்பெறும் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
No comments