ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் பாலேஷ் தன்கர்,43, போலியான வேலைவாய்ப்பு விளம்பரம் அளித்து, வேலை தேடி வரும் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து அளித்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் தென் கொரியாவை சேர்ந்தவர்கள்.
பாலியல் வன்கொடுமை புகாரை தொடர்ந்து வழக்கு விசாரணை டவுனிங் செண்டர் மாவட்ட கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கு குறித்த மாவட்ட நீதிபதி மைக்கேல் கிங் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2018 முதல் 2023 ஆண்டு வரை, 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட 39 குற்ற வழக்குகளில் தன்கர் குற்றவாளியென அறிவிக்கப்படுகிறது.அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அவருக்கு 30 ஆண்டுகள் பரோல் அளிக்கப்பட மாட்டாது.
குற்றங்களின் தீவிரத்தை பிரதிபலிக்கவும், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments