புனேயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இந்திய நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ஜுனா ஜாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இவரிடமிருந்து உலக ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் சிறுநீர் மாதிரி எடுத்தார்கள்.
அதில் ஊக்கமருந்து அவர் பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக இடநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உலக தடகள நேர்மை கமிட்டி விசாரணை நடத்தியது. இது குறித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளிக்கும்படியும் அவருக்கு பலமுறை நினைவூட்டியது.
ஆனால் அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் விசாரணை இல்லாமல் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதாக புரிந்து கொள்ளப்பட்டது. எனவே உலக தடகள நேர்மை கமிட்டி அர்ஜுனா ஜாதவ் போட்டியில் பங்கேற்க நான்கு வருடங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் வருடம் டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து அவருடைய போட்டி முடிவுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு அந்த காலகட்டத்தில் அவர் வாங்கிய பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments