• Breaking News

    கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 400 மாணவர்களுக்கு உடல்நலகுறைவு..... போலீசார் விசாரணை

     


    தெலுங்கானாவின் ரங்காரெட்டி  மாவட்டம், குண்ட்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரவு உணவு சாப்பிட்ட  மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, கல்லூரி விடுதியில்  வழங்கப்பட்ட ‘ஆலு குருமா’ மற்றும் ‘சப்பாத்தி’ உணவுகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு நள்ளிரவில் உடல்நலம் பாதிக்கப்பட்டது.  இதில் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தொடர்ந்து வாந்தி எடுப்பதுடன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ உதவிக்காகவும் சென்றனர். அந்த கல்லூரி வளாகத்தில் 800 முதல் 900 மாணவர்கள் வரை வசித்து வருகிறார்கள். அதில் அதிகமான மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அறிந்த ஹைத்நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், “நாங்கள் இதைப் பற்றிய தகவலைப் பெற்றுள்ளோம், ஆனால் கல்லூரி நிர்வாகம் உணவு நல்லதுதான் என கூறியுள்ளது. மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் எதுவும் புகார் அளிக்கவில்லை. புகார் கிடைத்தால், தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்” என்றார். தற்போது, உணவு விஷத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாணவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    No comments