கும்மிடிப்பூண்டி அதிமுக பேரூர் கழகம் 3வது அதிமுக வார்டு செயலாளர்கள் ஏற்பாட்டில் திண்ணைபிரசாரம்...... முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது......


 திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அடுத்த ஓடை பேரூர் 3.வது அதிமுக.வார்டு செயலாளர்கள் எம் எஸ் எஸ் வேலு.மோகன்  ஏற்பாட்டில்  வீடு வீடாகச் சென்று தாய்மார்களுடன் திண்ணையில் அமர்ந்து அதிமுக.கழக செய்தி தொடர்பாளர் பொன்னையன் மாவட்ட செயலாளர் பலராமன் கலந்து கொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களும் மற்றும் தற்போது இந்த ஆட்சியில் நடைபெறும் அவல நிலையை பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு ஏழை150 பெண்களுக்கு புடவை வழங்கினார்கள்.அப்போது ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு பேரூர் கழக.செயலாளர் எஸ் டி டீ. ரவி  மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மகேந்திரன் மாவட்ட துணை செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர்.சியாமளா தன்ராஜ் மற்றும் கே எம் எஸ் சிவகுமார் மு க சேகர் இமயம் மனோஜ் பல்லவாடா ரமேஷ் டேவிட் சுதாகர். எட்டியப்பன். மோகன் உள்ளிட்டகழக நிர்வாகி கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments